தமிழில் பல ஹீரோக்கள் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்கிறார் பரத். இது பற்றி அவர் கூறியதாவது: சமீபகாலமாக வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்கள் வருகின்றன. பெரிய நடிகர், அறிமுக நடிகர் என யார் நடித்தாலும் 2 ஹீரோ கதைகள் ஜெயித்திருக்கிறது. ஆரம்பத்தில் 'பாய்ஸ்Õ படத்தில் நான்கு பேருடன் சேர்ந்து நடித்தேன். பின் 'பட்டியல்Õ, Ôவெயில்Õ உள்ளிட்ட சில படங்களிலும் இரட்டை ஹீரோக்களில் ஒருவனாக நடித்தேன். 'டபுள் ஹீரோ கதையில் நடிக்காதீர்கள்?Õ என சிலர் அறிவுரை கூறியதால், அதன்பின் அப்படிப்பட்ட கதைகளை தவிர்த்தேன். ஆனால் கதையை ரசிக்கும் போக்கு இப்போது மாறி இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் மீண்டும் இரு ஹீரோ கதைகளில் நடிக்கிறேன். பல ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படங்கள் பாலிவுட்டில் நிறைய வருகிறது. தமிழில் அப்படி இல்லை. பல ஹீரோக்கள் கதைக்கு எல்லா நடிகர்களுமே தயாராக வேண்டும் என்பது என் கருத்து.
Source: Dinakaran
Post a Comment