அஞ்சலியை மர்ம கும்பல் துரத்தியதால் பரபரப்பு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

குமரி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தயாராகும் படம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’. இந்த படத்தில் கரண், அஞ்சலி, சரவணன், கஞ்சாகருப்பு நடிக்கின்றனர். வடிவுடையான் இயக்குகிறார். நேற்று பிற்பகல் குலசேகரத்தை அடுத்த மங்கலம் பகுதியில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அப்போது ஒரு கும்பல் காரில் அந்த இடத்துக்கு வந்தது. காரிலிருந்து இறங்கியவர்கள், இயக்குனர் வடிவுடையானை பார்த்து, Ôகுமரி மாவட்டத்தை இழிவுபடுத்தி படம் எடுக்கிறாயா?Õ எனக் கூறி சரமாரியாக அவரை தாக்கினர். இதில் வடிவுடையானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கும்பலில் சிலர், அஞ்சலியை நோக்கி வந்தனர். பயந்துபோன அஞ்சலி ஓட, அவரை அந்த கும்பல் துரத்தியது. அருகில் உள்ள வீட்டுக்குள் அஞ்சலி புகுந்தார். ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அங்கிருந்த படப்பிடிப்பு குழுவினரின் காரை தாக்கிவிட்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து அஞ்சலி கூறும்போது, ÔÔஷூட்டிங் நடக்கும்போது ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது. அவர்கள் யார் என்றே தெரியாது. என்னை நோக்கி ஓடி வந்தனர். இதனால் பயந்து, அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்து
தப்பினேன். அதை இப்போது நினைத்தாலும் படபடப்பாக இருக்கிறதுÕÕ என்றார்.


Source: Dinakaran


Source: India Glitz
 

Post a Comment