ஆஜராவார்களா நயன் -பிரபுதேவா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆஜராவார்களா நயன் – பிரபுதேவா?

10/12/2010 11:10:09 AM

பிரபு தேவா மீது சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் தொடர்ந்த வழக்கில் வருகிற 19ந் தேதி நேரில் பிரபு தேவா, நயன்தாரா இருவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ரம்லத் தொடர்ந்துள்ள இரு வழக்குகளிலும் ஆஜராகி நேரில் விளக்கமளிக்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் நேற்று பிரபுதேவா மற்றும் நாயன்தாராவுக்கு தரப்பட்டது.

பிரபுதேவா தற்போது மும்பையில் ஒரு படப்பிடிப்பில் உள்ளார். எனவே அவரது சம்மனை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள பிரபுதேவாவின் தந்தையும், டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. நயன்தாரா வீடு கேரளாவில் உள்ளது. அவரது சம்மன் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வருகிற 19-ந்தேதி மீண்டும் நடக்கிறது. அப்போது இருவரும் கோர்ட்டில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Source: Dinakaran
 

Post a Comment