தமிழச்சியாக நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா!

|

Priyanka Chopra
ஹிந்திப் படம் ஒன்றில் தமிழ் பெண்ணாக நடிக்கிறார் முன்னாள் உலக அழகியும், முன்னணி நடிகையுமான பிரியங்கா சோப்ரா.
க்ரிஷ், பேஷன் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரியங்கா. தேசிய விருது பெற்றவர்.
ஆங்கில எழுத்தாளர் சேதன் பகத் எழுதிய நாவல் ’2 ஸ்டேட்ஸ்’. வட இந்தியரான சேதன், தமிழ் பெண்ணை மணந்துள்ளார். தனது திருமண அனுபவத்தை மையமாக கொண்டே இந்த நாவலை எழுதியுள்ளார் சேதன்.
இந்த நாவலை படமாக்குகிறார் சித்தார்த் ஆனந்த். சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார்.
இந்த படத்தில் சைஃப் அலிகான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தமிழ் பெண்ணாக நடிக்கிறார் பிரியங்கா. இதற்காக தமிழில் பேச அவர் பயிற்சி எடுத்து வருகிறார்.
தமிழன் படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read Priyanka Chopra plays as a Tamil girl
 

Post a Comment