இந்த சட்டவிரோத திருமணத்திற்குப் பின்னர் இருவரும் நாட்டை விட்டு வெளியேறி துபாயில் போய் குடித்தனம் நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம் என்பது அவர்களின் திட்டமாகும்.
நயன்தாராவும் பிரபு தேவாவும் கள்ளக் காதலர்களாக இருந்து கல்யாண ஜோடியாக மாறத் திட்டமிட்டனர். நாட்டின் சட்ட திட்டங்கள் எதையும் சற்றும் மதிக்காமல், இதனை வெளிப்படையாகவே அறிவித்தார் பிரபு தேவா. இப்போது குடும்ப நல நீதிமன்றத்தில் பிரபு தேவா, நயன்தாரா இருவர் மீதுமே வழக்குத் தொடர்ந்துள்ளார் பிரபு தேவாவின் சட்டப்பூர்வ மனைவியான ரம்லத்.
ஆரம்பத்தில் ரம்லத்தை சமாதானப்படுத்தி, நயன்தாராவை திருமணம் செய்து கொண்டு ஒரு வீட்டை சென்னையிலும் நயன்தாராவை ஹைதராபாதிலும் ‘மெயின்டெய்ன்’ பண்ணத் திட்டமிட்டார் பிரபு தேவா. ஆனால் அந்த நினைப்பில் மண் விழ, இப்போது துபாய்க்குப் போய்விடும் திட்டத்தில் உள்ளனராம் நயனும் பிரபு தேவாவும்.
இதற்கு வசதியாக அவர்களுக்கு துபாயில் வீடு பார்த்து வைத்திருக்கிறார் நயன்தாரா அண்ணன் என்றும் கூறப்படுகிறது.
இருந்தாலும் இந்திப் படங்கள் இயக்க நிறைய வாய்ப்புகள் வருவதால் மும்பையிலும் ஒரு வீடு பார்த்து துபாய்க்கும், மும்பைக்குமாக ஷன்டிங் அடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம்.
இந்த நிலையில் நயன்தாராவும், பிரபுதேவாவும் நடன பள்ளிக்கு இடம் பார்ப்பதற்காக ரகசியமாக துபாய் சென்று திரும்பிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சில நாட்கள் துபாயிலேயே தங்கி அங்குள்ள பிரபல புரோக்கர்கள் மூலம் இடத்தை அலசியுள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்ட இடங்களை பார்த்த பிறகு, துபாயின் மையப் பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளார்களாம். இங்குதான் வீட்டுடன் கூடிய பிரமாண்ட நடனப் பள்ளியைக் கட்ட திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இருவரும் துபாயில் குடியேற திட்டமிட்டுள்ளது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.
முதல் மனைவி ரம்லத் குடும்ப நல கோர்ட்டில் நயன்தாரா, பிரபுதேவா திருமணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் சேர்ந்து சுற்றுவதற்கும் தடை கோரியுள்ளார். இருந்தாலும் பிரபு தேவாவும் நயனும் அதை சட்டை செய்ததாகத் தெரியவில்லை.
Post a Comment