பாவனா கையில் கன்னடம் மட்டும்!

|

Bhavana
ஒரு நேரத்தில் படு பிசியாக நடித்து வந்த பாவனாவிடம் இப்போது கன்னடப் படங்கள் சிலவற்றைத் தவிர வேறு எதுவுமே இல்லையாம். இருந்தாலும் விசனப்படாமல் இருக்கும் படங்களில் நடித்து வருகிறாராம்
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து, அங்கிருந்து தெலுங்கில் புகழ் பெற்று, பிறகு மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்து வந்த பிசி நடிகை பாவனா. மூன்று மொழிகளிலும் அவர் பெயர் சொல்லும்படியாக பல படங்கள் அமைந்தாலும் கூட முன்னணி நடிகையாக பெரிய அளவுக்கு வர முடியவில்லை.
இப்போது சுத்தமாக அவருக்கு எந்த மொழியிலும் படம் இல்லையாம். கன்னடத்தில் மட்டுமே சில வாய்ப்புகள் உள்ளனவாம். அதில் மட்டும்நடித்துக் கொண்டிருக்கிறாராம் பாவனா. ஆனால் அதுகுறித்து அவரிடம் கவலை இல்லை.
நல்ல படத்திற்காக காத்திருக்கிறேன். இது பாவனாவின் சிறந்த படம் என்று சொல்லும்படியான படமாக அது அமைய வேண்டும். அது முடித்த பிறகுதான் கல்யாணம் மற்றதெல்லாம். அதுவரை கல்யாணத்திற்கு நான் அவசரப்படவில்லை.
நான் கவர்ச்சியை நம்பவில்லை. தேவையில்லாமல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களுக்கு மோகத் தீயை மூட்ட விரும்பவில்லை. நல்ல கதை இருப்பவர்கள், நான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என நினைப்பவர்கள் என்னிடம் வருகிறார்கள். அப்படிப்பட்ட கதையைத்தான் நான் எதிர்பார்க்கிறேன் என்கிறார் பாவனா.
பாவனா பேசுவதே சித்திரம் போலத்தான் இருக்கிறது!
 

Post a Comment