தமிழில் போட்டி கடுமையாக இருக்கிறது என்று ஷீலா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நான் சென்னை பெண்தான். ஆனாலும் தெலுங்கில், மலையாளத்தில் சாதித்த அளவிற்கு, தமிழில் சாதிக்க முடியவில்லை. இப்போது கூட தெலுங்கு, மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் படங்கள் இல்லை. முன்பு சில தவறான படங்களை தேர்வு செய்ததுதான் அதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. நேரம் சரியாக அமையவில்லை என்றுதான் சொல்வேன்.
தெலுங்கு, மலையாளத்தில் டாப் ஹீரோயின்கள் படங்கள் வெளிவரும் அதே நேரத்தில், அடுத்தகட்ட ஹீரோயின்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறது. தமிழில் கடும்போட்டி இருக்கிறது. மற்ற மொழிகளில் நடிப்பவர்கள் அனைவருமே தமிழில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதோடு நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களை தாண்டி ஜெயிப்பது கடினம். அதற்காக போராடுவேன்.
Source: Dinakaran
Post a Comment