நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது…
'நான் ரொம்ப பிசி. நான் யாரையும் லவ் பண்ணலை'ன்னு சொல்லும் காலேஜ் நடிகை, சமையல் கற்பதில் கவனம் செலுத்துறாராம்… செலுத்துறாராம்… 'நடிகைகளுக்கு சமையல் தெரியாதுன்னு நினக்கறாங்க. அதை முறியடிச்சு காட்றேன் பாரு'ன்னு தோழிகளிடம் சவால் விட்டிருக்கிறாராம். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அவசர அவசரமா சமையல் கற்பது ஏனோ?'ன்னு கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்குதாம்… கிசுகிசுக்குதாம்…நல்லகாலம் பொறக்குது…
வித்யமான இசைகிட்ட வாய்ப்பு கேக்கறதுக்கு பாட்டுக்காரங்க, தயங்குறாங்களாம்… தயங்குறாங்களாம்… 'உங்க மெட்டுக்கு பாட்டெழுதணும்'ன்னு விவேகமான கவிஞரு வருஷக்கணக்குல வாய்ப்பு கேட்டதால, சமீபமா அவருக்கு பாட்டெழுதும் வாய்ப்பு தந்தேன்'னு ஒரு விழாவுல இசை பகிரங்கமா சொன்னதால பக்கத்துல இருந்த கவிஞருக்கு தர்மசங்கடமாயிடுச்சாம்… வாய்ப்பு கேட்டா நம்மையும் இப்படித்தான் சொல்லுவாருன்னு பயந்து, அவரை பாத்தாலே பாட்டுக்காரங்க ஒதுங்கறாங்களாம்…. ஒதுங்கறாங்களாம்…
உச்ச நட்சத்திரம் ஆட்டோகாரரா நடிச்ச படத்தோட 2&ம் பாகம் உருவாகப்போறதா கிசுகிசு வருதாம்… வருதாம்… செகன்ட் பார்ட் ஸ்கிரிப்ட் எதுவும் ரெடி பண்றீங்களான்னு அந்த கிருஷ்ண டைரக்டர்கிட்ட கேட்டா, இல்லைன்னு கைய விரிக்கிறாராம்… எங்கிட்ட யாரும் அப்படி பேசவே இல்லையே… எப்படி இந்த செய்தி வந்துச்சுனு தெரியலைன்னு சொல்றாராம்… சொல்றாராம்…
Source: Dinakaran
Post a Comment