எந்திரன் திரையரங்குகளில் நான் மகான் அல்ல!-’ஷாக்’ தந்த விளம்பரம்!

|

Karthi and Kajal Agarwal
நான் மகான் அல்ல படம் குறித்த நாளிதழ் விளம்பரத்தைப் பார்த்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஷாக் ஆகியுள்ளதாம்.
ஏன் இந்த ஷாக்?
அதில் ஒன்று நான் மகான் அல்ல என்ற படத்தின் விளம்பரம். இதில் சொர்ண சக்தி அபிராமி மற்றும் ஆல்பர்ட் திரையரங்குகளில் தினசரி 4 காட்சிகளாக 50வது நாளைக் கடந்து அந்தப் படம் ஓடுவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
விஷயம் என்னவென்றால் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள இரு திரையரங்குகளிலும் கடந்த அக்டோபர் முதல் தேதி ரஜினியின் எந்திரன் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த காம்ப்ளக்ஸ்கள் எதிலுமே நான் மகான் அல்ல படம் கடந்த 10 நாட்களாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அபிராமியில் கடந்த ஒரு வாரமாக நான்கு திரையரங்குகளிலும் தினசரி 5 காட்சிகளாக எந்திரன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆல்பர்ட், பேபி ஆல்பர்ட் இரண்டிலுமே தினசரி 5 காட்சிகளாக எந்திரன் ஓடிக் கொண்டுள்ளது.
ஆனால் இந்த இரு தியேட்டர்களிலும் நான் மகான் அல்ல ஓடி வருவதாக விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பெரிய சைஸ் விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இது தெரிந்தே நடந்த தவறா அல்லது பிழையாக நேர்ந்ததா என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாம்.
 

Post a Comment