9/24/2010 10:19:15 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
வில்லேஜ் ஸ்டோரி எடுக்க¤ற மதுரமான டைரக்டர் படத்துல நடிக்கிறாரு வர்ஷ¤னியான நடிகை. குடும்ப பெண்ணா நடிக்க¤றதுக்காக கொஞ்சமா உடல் வெயிட் போடச் சொன்னாராம்… சொன்னாராம்… ஆனா நடிகையோ ரொம்ப ஓவரா வெயிட் போட்டுட்டாராம்… போட்டுட்டாராம்… இதனால ரொமான்டிக் ஹீரோயினா நடிக்கிற படங்களுக்கு பிரச்னை ஏற்பட்டிருக்காம்… ஏற்பட்டிருக்காம்… அந்த பட இயக்குனருங்க சத்தம் போடுறதால திரும்ப உடம்பை குறைக்க முயற்சி பண்ணிட்டிருக்கிறாராம்… பண்ணிட்டிருக்கிறாராம்…
கவர்ச்சிக்கு குட்பை சொல்லிட்டு, கேரக்டர் ரோலுக்கு மாறப் போறேன்னு சென் நடிகை சொல்றாராம்… சொல்றாராம்… சின்ன படத்துல நடிக்க சமீபத்துல தயாரிப்பு ஒருத்தரு கேட்டாராம்… கேட்டாராம்… Ôகவர்ச்சியா நடிக்க மாட்டேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கிற கதையிலதான் நடிப்பேன்Õனு ஜகா வாங்க¤ட்டாராம்… ஜகா வாங்கிட்டாராம்…
ஏற்கெனவே நடிக்கிறேன்னு ஒத்துகிட்ட படங்கள்லேருந்து ஐம் காட் ஹீரோ எஸ் ஆகுறாராம்… ஆகுறாராம்… நடிக்க கேட்டா, Ôசம்பளம் உயர்த்திட்டேன். நான் கேட்கிற சம்பளம் உங்களால கொடுக்க முடியாது. அதனால வேற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துட்டேன்Õனு கையை விரிக்கிறாராம்… கையை விரிக்கிறாராம்…
Post a Comment