தசராவுக்கு எந்திரன் ‘டச்’ கொடுத்த கர்நாடக மாணவர்கள்!

|

Rajinikanth and Aishwarya Rai
மைசூர், பெங்களூரில் இது தசரா சீஸன். ஆனால், இந்த ஆண்டோ எந்திரன் சீஸன் போலிருக்கிறது!
பொதுவாக தசராவுக்கு களிமண் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி ஊர்வலமாய் கொண்டு செல்வது வழக்கம்.
இந்த முறை அதில் ஒரு மாறுதல். சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பார்த்த எஃபெக்டில், சிறு ரோபோக்களை உருவாக்கி, அவற்றை ஊர்வலமாகக் கொண்டு செல்கிறார்களாம்.
யானைகள், அழகிய ரதம், கிராமியக் காட்சிகள், பண்டைய போர்க்களக் காட்சிகள் என பாரம்பரியம் சொல்லும் இந்த தசரா ஊர்வலத்தில், ரோபோ வடிவ ரஜினியின் சிலைகளும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதுதவிர மேலும் சில உருவங்களையும் ரோபோ வடிவத்திலேயே செய்து எடுத்துச் செல்கிறார்களாம்.
“களிமண் பொம்மைகள் மழையால் கரைந்துவிடக்கூடும். ஆனால் இதுபோன்ற ரோபோட்டிக் பொம்மைகளுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. எங்களால் புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளவும் முடிகிறது”, என்கிறார்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்கவிருக்கும் கர்நாடக பள்ளி மாணவர்கள்.
மனதுக்குப் பிடித்த விஷயத்தின் வடிவில் கல்வி கற்றுக் கொள்வது ஒரு சிறந்த முறை. இந்த மாணவர்கள் எந்திரன் வடிவில் கல்வி கற்க ஆசைப்படுகிறார்கள். அதை அனுமதிப்பதில் தவறில்லை, என்கிறார்கள் இந்த மாணவர்களின் ஆசியர்கள்.
 

Post a Comment