‘நாடோடிகள்’ படத்தில் நடித்த பின் ‘ஈசன்’ படத்தை இயக்க சென்றுவிட்டார் சசிகுமார். இதில் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து ‘போராளி’ என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். அவர் கூறியது: ‘ஈசன்’ சிட்டி சப்ஜெக்ட். என்ன கதை என்கிறார்கள். சிட்டிக்குள் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். எது எப்போது நடக்கும் என்று கணிக்க முடியாது. இப்படியொரு கருவை வைத்துத்தான் 'ஈசன்' படம் உருவாகி இருக்கிறது. இதில் வைபவ், சமுத்திரக்கனி, ‘நாடோடிகள்’ அபிநயா, அபர்ணா நடிக்கின்றனர். இவர்கள் தவிர பல கதாபாத்திரங்கள் வந்து செல்லும். அடுத்த மாதம் ஆடியோ ரிலீஸ். டிசம்பர் மாதம் படம் திரைக்கு வரும். ‘நாடோடிகள்’ ஷூட்டிங் நடக்கும்போதே இந்த கதை உருவாகி விட்டது. அப்போதே அபிநயா இதில் நடிப்பதுபற்றி முடிவு செய்யப்பட்டது. அடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் 'போராளி’ என்ற படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்குகிறது.
Source: Dinakaran
Post a Comment