இரண்டு ஹீரோ கதைகளில் தொடர்ந்து நடிப்பேன்-பரத்

|

Bharath
டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் பரத்.
இரண்டு ஹீரோ கதைகளில் நடிக்கிறீர்களே என்று என்னை சிலர் தொடர்ந்து கேட்கிறார்கள், எழுதுகிறார்கள். அவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்… நான் அறிமுகமானதே நான்கு ஹீரோக்களில் ஒருவனாகத்தான். தொடர்ந்து செல்லமே, வெயில், பட்டியல் இப்படி இரண்டு ஹீரோ கதைகளில் நடித்துள்ளேன். இனியும் கூட நடிப்பேன்…”
-தொடர்ந்து தோல்விப் படங்கள் கொடுத்து, மார்க்கெட் டல்லடித்ததால் இரண்டு ஹீரோ கதாகளில் நடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு பரத் சொன்ன பதில் இது.
மேலும் அவர் கூறுகையில், “ரசிகர்களின் கதை கேட்கும் திறன் மாறிவிட்டது. அதற்கு தகுந்தாற் போல் கதை சொல்லிகளும் மாற வேண்டும். எனக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இது மாதிரியெல்லாம் நடிக்க மாட்டேன் என இனி கூற முடியாது.
ஹாலிவுட், பாலிவுட் என எல்லா சினிமாக்களிலும் இந்த நிலை தொடர்கிறது. இங்கும் அந்த நிலை விரைவில் வந்துவிடும். சிம்பு என் நண்பன். இந்த படத்தில் நடிக்க அழைத்தார். நடித்து விட்டேன். இனி வாய்ப்புகள் வந்து கதை நன்றாக இருந்தால் இதே போல நடிப்பேன்” என்றார்.
காலத்தே வந்த ஞானோதயம்தான்!
 

Post a Comment