'வெளுத்து கட்டு' படத்தில் அறிமுகமான அருந்ததி, கூறியதாவது:கன்னடம், தெலுங்கில் நடித்த நான், இப்போது தமிழில் கவனம் செலுத்துகிறேன். ஹரிகுமார் ஜோடியாக 'போடிநாயக்கனூர் கணேசன்', விக்ராந்த் ஜோடியாக 'வவ்வால்', அகில் ஜோடியாக 'கருப்பர் நகரம்', விமல் ஜோடியாக 'கலிங்கத்துப் பரணி' ஆகிய படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் 'தெனாவட்டு' கதிர் இயக்கத்தில் தாரக ரத்னா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன்.நான் அதிக சம்பளம் கேட்பதாக சொல்வதில் உண்மை இல்லை. எனது வேலைக்கு தகுந்த சம்பளம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு? 'போடிநாயக்கனூர் கணேசன்' படத்தில், குளியல் காட்சியில் கவர்ச்சியாக நடித்தது பற்றி கேட்கிறார்கள். தமிழில் நிறைய ஹீரோயின்கள் இருக்கிறார்கள். கடும்போட்டி இருக்கிறது. அதை சமாளிக்க கிளாமராக நடிக்கிறேன். இதை தவிர்க்க முடியாது.
Source: Dinakaran
Post a Comment