சரத்குமார்-சினேகா நடிக்கும் படம் 'விடியல்'. செல்வராஜ் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இம் மாத இறுதியில் அம்பாசமுத்திரம் பகுதியில் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் சரத்குமாருக்கு இன்னொரு ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி இயக்குனர் செல்வராஜ் கூறியதாவது:
படத்தின் கதை 1946, 1976, 2010 என மூன்று கால கட்டங்களில் நடக்கிறது. சரத்குமார் இரண்டு வேடங்களிலும் மூன்று தோற்றங்களிலும் நடிக்கிறார். இளம் வயது சரத்குமாருக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். அந்த படப்பிடிப்பு ஓரளவு முடிந்திருக்கிறது. ஹீரோ 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி பிறக்கிறார். அவரது பெயர் சுதந்திரம். முதல் தலைமுறை சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறோம். முன்னணி ஹீரோயின்களுடன் பேசி வருகிறோம். புதுமுகங்கள் தேர்வும் நடக்கிறது. ரவிக்கை அணியாமல் நடிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.
Source: Dinakaran
Post a Comment