நடிகர் ஜீவா & சுப்ரியா தம்பதிக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. ஆர்.பி. சவுத்ரியின் மகனுமான நடிகர் ஜீவாவுக்கும், அவரது உறவுப் பெண் சுப்ரியாவுக்கும் கடந்த 2007ம் ஆண்டு நவம்பரில் திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுப்ரியாவுக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தை நடிகர் ஜீவா மற்றும் குடும்பத்தினர் இனிப்பு கொடுத்து உற்சாகமாக கொண்டாடினார்கள்.
Source: Dinakaran
Post a Comment