நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
கவுரவமான படம் பார்த்த உசர நடிகர் வருத்தமா இருக்கிறாராம்… இருக்கிறாராம்… தன்னோட நிறைய காட்சிகள் எடிட¢டிங்ல இடம் மாறி போயிருக்காம்… போயிருக்காம்… இதுக்கு பிறகு ஏன் இந்த காட்சில இவர் இப்படி வர்றாருன்னு ரசிகருங்க குழப்பம் அடையுறாங்களாம்… அடையுறாங்களாம்… சில காட்சிகளை வெட்டியும் விட்டிருக்காங்களாம். இதனால நடிகருக்கு வருத்தமாம்… வருத்தமாம்…நல்ல காலம் பொறக்குது…
நயன நடிகையோட லேட்டஸ்ட் படம் கை கொடுத்ததால சந்தோஷமா இருக்கிறாராம். மறுபடியும் நடிப்புல ஆர்வம் காட்டலாம்னு யோசனையில இருக்க¤றாராம்… இருக்க¤றாராம்… 'உன்னால இன்னும் பீல்டுல நிக்க முடியும். சான்ஸ் கிடைக்கும்போது சம்பாதிச்சிடணும்'னு தோழிங்க காதை கடிக்கிறாங்களாம்… கடிக்கிறாங்களாம்… இதனால நடிகைக்கும் தாடிக்கார லவ்வருக்கும் மோதல் வரும்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க… பேசிக்கிறாங்க…
திவ்யமான நடிகை கன்னடத்துல நிறைய படங்கள்ல நடிக்க அட்வான்ஸ் வாங்கிட்டாராம்… வாங்கிட்டாராம்… கால்ஷீட் கொடுக்காம சொதப்புறாராம்… சொதப்புறாராம்… இதனால தயாரிப்புங்க கன்னட பிலிம் சேம¢பர்ல புகார் கொடுக்கப் போறாங்களாம்… போறாங்களாம்…
Source: Dinakaran
Post a Comment