தமிழ் படங்கள் போதும் :ஆதி!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆதி நடித்த 'அய்யனார்' தீபாவளிக்கு வெளிவருகிறது. தற்போது 'ஆடுபுலி', 'அரவான்' படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாள பட வாய்ப்புகளை அவர் மறுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: தெலுங்கு, மலையாளத்தில் நடிக்கக் கூடாது என்கிற எண்ணம் இல்லை. இப்போதைக்கு தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி நல்ல இடத்தை பிடித்து விட்டு, பிறகு மற்ற மொழிகளில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இருந்தாலும் 'ஈரம்' தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. 'அரவான்' தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகிறது. எனது உடலமைப்பு ஆக்ஷன் கேரக்டர்களுக்கு பொருந்துவதால் அப்படிப்பட்ட கதைகளாகவே வருகிறது. 'அய்யனார்' ஆக்ஷன் படம். 'ஆடுபுலி' பேமிலி படம். 'அரவான்' வேறொரு தளத்தில் செல்லும் படம். இப்படி கலந்து நடித்து ஆக்ஷன் இமேஜ் வந்து விடாமல் பார்த்துக் கொள்கிறேன். அடுத்து காமெடி படம் ஒன்றில் நடிக்கும் ஆசையில் இருக்கிறேன்.


Source: Dinakaran


Source: India Glitz
 

Post a Comment