பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கூறியதாவது:பாடலாசிரியனாக அறிமுகமாகி, 12 வருடங்களாகி விட்டது. கடந்த 7 வருடங்களாக அதிக படங்களுக்கு எழுதி வருகிறேன். இந்த ஆண்டில், இதுவரை 40 படங்களுக்கு எழுதியுள்ளேன். பல ஹிட் படங்களில், என் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. 'எந்திரன்' படத்தில், ரோபோ ரஜினி பேசும் கவிதையை நான் எழுதினேன். டைரக்டர் ஷங்கர் என்னிடம் கேட்டபோது, பெரிய நோட்டு புத்தகம் முழுக்க கவிதைகள் எழுதிக் கொடுத்தேன். அதில் பல வரிகளை தேர்வு செய்து, ரோபோ தன் சிந்தனையில் பேசுவதாக படமாக்கினார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு. இதுவரை 2 ஆயிரம் பாடல்கள் எழுதியுள்ளேன். விரைவில் நான் எழுதிய சினிமா பாடல்கள் மற்றும் கவிதைகள் அடங்கிய 3 புத்தகங்களை வெளியிட உள்ளேன்.பல இயக்குனர்கள், என்னை முக்கிய வேடத்தில் நடிக்க அழைத்தனர். ஆனால், நடிப்பில் எனக்கு ஆர்வம் இல்லை. ரசிகர்கள் விரும்புகின்ற, நேசிக்கின்ற பாடலாசிரியனாக இருப்பதே எனக்கான மரியாதையாக நினைக்கிறேன்.
Source: Dinakaran
Post a Comment