களவாடிய பொழுதுகள் என்ற பெயரில் படம் இயக்கி வரும் பச்சான் டைரக்டருக்கும், அந்த படத்தை தயாரிக்கும் ஐங்கரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாம். ஒருவழியாக இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் படத்தை பார்த்த தயாரிப்பு தரப்பிற்கு திருப்தி இல்லியாம். அந்த காட்சிகளை மட்டும் ரீ-ஷூட் பண்ணலாம் என்ற ஐங்கரனின் ஐடியாவை தட்டிக் கழித்து விட்டாராம் பச்சான். நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் படம். அதுல கருத்து சொல்றதுக்கோ, திருத்தம் சொல்றதுக்கோ ஒருத்தருக்கும் உரிமையில்லை. வேணும்னா இப்படியே ரிலீஸ் பண்ணுங்க. இல்லைன்னா விலை எவ்வளவுன்னு சொல்லுங்க. நானே படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணிக்கிறேன் என்றாராம். நல்லதா போச்சு என்று விலை சொன்ன நிறுவனத்திடம் பணத்தை அப்புறமா வாங்கிக்கோங்க என்று அவர் சொல்லியிருக்கிறார். பள்ளிக்கூடம் போன்ற தரமான படங்களை இயக்கிய பச்சான் இப்படி வம்பு பண்ணுவார்னு எதிர்பார்க்கலை என்று புலம்பிக் கொண்டிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.
Post a Comment