9/17/2010 10:31:28 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
பிரகாச இன்ஷியல் இயக்குனர் எடுத்த தெலுங்கு டைகர் படம் எதிர்பார்த்த அளவு போகலயாம்… போகலயாம்… இதனால இயக்குனரு அதிர்ச்சியில இருக்கிறாராம்… இருக்கிறாராம்… அந்த படத்தை தமிழ்ல தானே ஹீரோவா நடிச்சு, இயக்க பிளான் போட்டிருந்தாரு. அந்த பிளானையும் கைவிட்டுட்டாராம்… கைவிட்டுட்டாராம்…
சோனியான நடிகை திரும்ப நடிக்க வந்திருக்கிறாரு… வந்திருக்கிறாரு… அவரைவிட்டு பிரிஞ்ச செல்வமான இயக்கம், செல்போன்ல திடீர் வாழ்த்து மெசேஜ் அனுப்பினாராம்… நடிகைக்கு அனுப்பினாராம்… Ôதிரும்ப நடிக்க வர்றது சந்தோஷம். தொடர்ந்து நடிக்கணும்Õனு அந்த மெசேஜ்ல சொல்லியிருந்தாராம். பதிலுக்கு நடிகை நன்றி மெசேஜ் அனுப்பினாராம்… அனுப்பினாராம்…
கனியானவரு இயக்க இருந்த பட ஷூட்டிங் தள்ளிப்போகுதாம்… தள்ளிப்போகுதாம்… தாடிக்கார இயக்குனர்தான் இதுல ஹீரோ. அவர் இயக்குற படம் இன்னும் முடியாததால, கனியானவர் படம் தொடங்க லேட்டாகுமாம்… லேட்டாகுமாம்…
Post a Comment