உதட்டை கிழித்தது தோட்டா மயங்கி சரிந்தார் நீது

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தாய்லாந்தில் நடந்த படப்பிடிப்பில் நீது சந்திரா உதட்டை துப்பாக்கி தோட்டா கிழித்தது. ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்திருப்பவர் இந்தி நடிகை நீது சந்திரா. தற்போது அமீர் இயக்கும் 'ஆதிபகவான்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள பட்டயா தீவில் நடந்துவருகிறது. கதைப்படி அங்குள்ள துறைமுகத்துக்கு காரில் வந்து இறங்கும் நீது, கப்பலை நோக்கி நடப்பார். அப்போது மறைந்திருக்கும் ரவுடி கூட்டம் சரமாரியாக துப்பாக்கியால் சுடும். அதிலிருந்து நீது தப்பி செல்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. டைரக்டர் அமீர் 'டேக்' சொன்னதும் நீது காரிலிருந்து இறங்கி நடந்தார். அப்போது சரமாரியாக ரவுடிகள் சுடத் தொடங்கினார். இதற்காக போலி தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் ஒரு தோட்டா நீதுவின் உதட்டை கிழித்தது. குபுகுபுவென்று உதட்டிலிருந்து ரத்தம் கொட்டியது. பயந்து நடுங்கிய நீது கதறியபடி மயங்கி விழுந்தார்.எதிர்பாராத இந்த சம்பவத்தால் அமீர் உட்பட படக் குழுவினர் ஷாக் ஆனார்கள். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நீதுவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு டாக்டரிடம் அழைத்து சென்று காயத்துக்கு சிகிச்சை அளித்தனர்.இதுபற்றி நீது சந்திரா கூறும்போது, "காட்சிப்படி என் மீது எந்த குண்டும் படாத வகையில் நடந்து செல்வதற்காக குறிப்பிட்ட பாதையில் நடக்கும்படி அமீர் கூறி இருந்தார். காரிலிருந்து இறங்கி நடந்தவுடன் சரமாரியாக சுடத் தொடங்கினார்கள். பதற்றத்தில் எனக்கு சொல்லப்பட்டிருந்த பாதையைவிட்டு சற்று நகர்ந்து விட்டேன். இதனால் என் உதட்டை உரசிக்கொண்டு புல்லட் பறந்தது. ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்து மயங்கினேன். இதற்கிடையில் அனைவரும் ஓடி வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு காயத்துக்கு சிகிச்சை பெற்றேன். இப்போது காயம் ஆறி வருகிறது" என்றார்.


Source: Dinakaran
 

Post a Comment