நீது சந்திரா, அனுஷ்கா என ஆரம்பித்து கடைசியாக "மங்காத்தா'வில் அஜித்துக்கு ஜோடியாகிறார் திரிஷா. "ஜீ' படத்துக்குப் பின் அஜித் - திரிஷா கூட்டணி இதில் இணைகிறது.டிரெய்லருக்காக மட்டும் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் தொடங்குகிறது படத்துக்கான ஷூட்டிங். அஜித்துடன் நாகார்ஜுனாவும் நடிப்பதால் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது "மங்காத்தா'.
ரீமேக் சினிமாக்களில் அதிகமாக நடிக்கும் நடிகையாகியிருக்கிறார் ஜெனிலியா. தெலுங்கில் "பொம்மரிலு', தமிழில் "சந்தோஷ் சுப்பரமணி'யமாக ரீமேக் ஆன போது அவர்தான் ஹீரோயின். ஹிந்தியில் "இட்ஸ் மை லைஃப்' என்ற பெயரில் உருவான போது அவரே ஹீரோயின். இப்போது தெலுங்கு "ரெடி'யின் தமிழ் பதிப்பான "உத்தமபுத்திரன்'. இதன் ஹிந்தி பதிப்பிலும் அவர்தான் ஹீரோயினாம். தன் குட்டி ரசிகர்களுக்காக "ஆர்ட் அட்டாக்' என்ற நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது டிஸ்னி சேனல். குழந்தைகளின் பல வகையான திறன்களை வெளிக் கொண்டு வருவதுடன், குழந்தைகளின் திறன் அறிந்து அவற்றுக்கு வடிவம் கொடுப்பதாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஞாயிறு தோறும் காலை 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.
ஆமீர் கான் தான் நடித்து ஃப்ளாப் ஆன படங்களின் கலெக்ஷன்களை அடிக்கடி டி.வி.டி.யில் பார்ப்பது வழக்கம். ""நான் உருகி உருகி நடித்த காட்சிகளை ரசிகர்கள் புறக்கணித்து விட்டார்கள். அதனால் இனி அப்படி ரியாக்ஷன் காட்டக் கூடாது'' என்பதற்காகதான் ஃப்ளாப் படங்களைப் பார்ப்பதாக காரணம் சொல்கிறாராம் ஆமீர் கான். ரீமேக் சினிமாக்களில் அதிகமாக நடிக்கும் நடிகையாகியிருக்கிறார் ஜெனிலியா. தெலுங்கில் "பொம்மரிலு', தமிழில் "சந்தோஷ் சுப்பரமணி'யமாக ரீமேக் ஆன போது அவர்தான் ஹீரோயின். ஹிந்தியில் "இட்ஸ் மை லைஃப்' என்ற பெயரில் உருவான போது அவரே ஹீரோயின். இப்போது தெலுங்கு "ரெடி'யின் தமிழ் பதிப்பான "உத்தமபுத்திரன்'. இதன் ஹிந்தி பதிப்பிலும் அவர்தான் ஹீரோயினாம்.
80-களில் வெளியான திரைப் பாடல்களை மட்டுமே அதிகம் விரும்பி கேட்பார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். வீடு, கார், அலுவலகம் என எங்கும் இசையில் நீந்திக் கொண்டே இருப்பார். வீட்டில் மினி தியேட்டர் ஒன்று வைத்திருக்கிறார். வீட்டில் இருக்கும் இரவு நேரங்களில் கண்டிப்பாக ஒரு படம் பார்த்து விடுவார். தன் உதவியாளர்களையும் படம் பார்க்க வற்புறுத்துவார்.
""பாய்ஸ்' படத்தில் வேலை செய்தது எனக்கு பிடிக்கவே இல்லை. அப்படத்துக்குப் பின் இனி நடிக்க கூடாது என்றுதான் அப்போது தோன்றியது. அது அறிமுக படமாக இருந்தாலும் தெலுங்கில் வெளியான (உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்) படம்தான் என் முதல் படம் என சொல்லிக் கொள்வதில் ஆசைப்படுகிறேன்''. இவ்வாறு தன் டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார் சித்தார்த். தன் காதல் மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் எழுப்பிய தாஜ்மஹாலின் வரலாற்றை விவரிக்கிறது டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் "மிஸ்ட்ரி ஆஃப் தாஜ்மஹால்'. அதை கட்டிய கலைஞர்களின் அடையாளம், அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள், கட்டப்பட்டுள்ள இடம், வடிவமைப்பு உள்ளிட்ட பல விவரங்களை ஆராய்கிறது இந்த நிகழ்ச்சி. அக்டோபர் 31-ல் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம். "வான்டட்', "தபாங்' படங்கள் ஹிட்டானதில் சல்மானின் மார்க்கெட் பாலிவுட்டில் எகிறி நிற்கிறது. ஷாருக்கானை விட அதிக சம்பளம் வாங்குகிறார். தற்போது உருவாக்கத்தில் உள்ள "ரெடி' படத்துக்காக ரூ. 21 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார். இதை தவிர மும்பை, டெல்லி சிட்டி ரைட்ஸýம் அவருக்குத்தானாம். பொது விழாக்களில் கலந்துக் கொள்வதில்லை என்ற பாலிஸி வைத்திருந்தாலும் அவ்வப்போது நடக்கும் சினிமா விழாக்கள் பற்றி கேட்டு தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார் கவுண்டமணி. யார் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்? என்ன பேசினார்கள்? படத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்தையும் கேட்டு தெரிந்துக் கொண்டு அந்த நேரத்தில் டைமிங் காமெடி ஒன்றை தட்டி விட்டு சிரிப்பாராம் கவுண்டர்.
Post a Comment