9/29/2010 5:00:51 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
காதலுக்கு கோட்டை கட்டியவரின் மகளுக்கு கையில் படம் எதுவுமில்லையாம்… எதுவுமில்லையாம்… நடிச்ச வரைக்கும் போதும்; காதலிக்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாகுன்னு தாய்க்குலம் நச்சரிக்கிறாராம்… நச்சரிக்கிறாராம்…
இந்த வருஷ தீபாவளி விளம்பரங்கள்ல நடிகர்கள் ஆதிக்கம்தான் அதிகமா இருக்குதாம்… இருக்குதாம்… அதனால வழக்கமா தீபாவளி விளம்பரத்துல கல்லாகட்டுற நடிகைங்க கலக்கத்துல இருக்காங்களாம்… கலக்கலத்துல இருக்காங்களாம்…
காதலைச் சொல்லாத காலஞ் சென்ற நடிகர், நிறைய பேருக்கு எந்த கணக்கு வழக்குமில்லாம கடன் கொடுத்திருக்காராம்… கொடுத்திருக்காராம்… நிறைய பேருக்கு நம்பிக்கையின் பேரில் ஜாமீன் போட்டிருக்காராம்… போட்டிருக்காராம்… இந்த பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம அந்த குடும்பம் தத்தளிக்குதாம்… தத்தளிக்குதாம்…
Post a Comment