10/2/2010 1:51:43 PM
நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது…
மூணுஷா உள்ளிட்ட பிரபல ஹீரோயின்களுடன் நெருங்கிப் பழகிய சிட்னியான காஸ்ட்யூமர், சமீபகாலமா யார் பக்கமும் தலைகாட்டுவதில்லையாம்… தலைகாட்டுவதில்லையாம்… டோலிவுட் ஹீரோயின்கள் சிலர் போதை மருந்து விவகாரத்தில் சிக்கியபோது சிட்னியானவரின் பெயரும் பலமா அடிபட்டது. அதில் நடுங்கிப்போனவரு, அடிக்கடி தலைகாட்டினா தன்னைப்பற்றி தகவல் வந்துகொண்டே இருக்கும் என்பதால மறைவு வாழ்க்கை வாழ்றாராம்… வாழ்றாராம்…
டாக்ஸி நடிகரு புதுசா கார் வாங்கியிருக்கிறாராம்… வாங்கியிருக்கிறாராம்… புது கார்ல நண்பர்களை ஏத்திகிட்டு பக்த்து யூனியன் பிரதேசத்துக்கு போய் சந்தோஷத்தை கொண்டாடினாராம்… 'தண்ணிக்கு பேமசான இடமாச்சே… அபிஷேகம் நடந்துச்சா?'ன்னு மிஸ்ஸான நண்பர்கள் பிட்டை போட்டதும், 'ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா ஒரு லாங் டிரிப்புக்காகத்தான் போனேன்'னு அசட்டு சிரிப்பு சிரிச்சு சமாளிக்கிறாராம்… நடிகரு சமாளிக்கிறாராம்…..
ஷூட்டிங்குக்காக வெளிநாட்டுக்குப் போய் திரும்பிய நடிகர்கள், காய்ச்சல் வந்து படுத்துடறாங்களாம்… படுத்துடறாங்களாம்… அதனால வெளிநாடு ஷூட்டிங்குன்னாலே நடிகர்கள் பயப்படுறாங்களாம். சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பிய விரல் நடிகரு, கடுமையான காய்ச்சல்ல அவதிப்பட்டு இப்போதான் குணமாகி இருக்காராம்… பிரசன்னமான நடிகரும் கடந்த 1 மாதமா செல்போனை தூக்கிப்போட்டுவிட்டு ட்ரீட்மென்ட் எடுக்கிறாராம்… ட்ரீட்மென்ட் எடுக்கிறாராம்…
Post a Comment