நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைஅருகே உள்ள இடும்பாவனம் என்ற ஊரில் நேற்று கண்டனக் கூட்டம் ஒன்றில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு பேசிய எஸ்.எஸ்.சந்திரன், கூட்டத்தை முடித்த பின்னர் நள்ளிரவில் மன்னார்குடி வந்த எஸ்.எஸ்.சந்திரன் அங்குள்ள பூர்ணா என்ற தனியார் ஹோட்டலில் தங்கினார். இந்த நிலையில் அவருக்கு மாத்திரை கொடுப்பதற்காக அவரது உதவியாளர் ஒரு மணியளவில் சந்திரனை எழுப்பினார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. உடலிலும் அசைவு எதுவும் இல்லை.
இதனால் பயந்து போன உதவியாளர் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சந்திரனைப் பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் அவர் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக சந்திரனின் உடலை அவரது காரிலேயே சென்னைக்குக் கொண்டு வந்தனர். சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட சந்திரனின் உடலைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். Source: Dinakaran
Post a Comment