அமரா படத்திலிருந்து ஓவியா நீக்கம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஞாபகங்கள்' படத்தையடுத்து ஒளிப்பதிவாளர் ஜீவன் இயக்கும் படம் 'அமரா'. இதில் புதுமுகம் அமரன் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக 'களவாணி' ஓவியா ஒப்பந்தமாகியிருந்தார். திடீரென்று அவரை நீக்கிவிட்டு 'காதலர் குடியிருப்பு' ஸ்ருதியை ஹீரோயினாக்கி உள்ளனர். இதுபற்றி ஜீவனிடம் கேட்டபோது, "ஹீரோயினாக ஓவியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரது கால்ஷீட் பெறுவதில் பிரச்னை வந்தது. கதைப்படி ஹீரோயின் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது. எப்போதும் தளத்தில் இருக்க வேண்டி இருக்கும். ஆனால், அவரால் அப்படி வர முடியாது என்றார். இதனால் அவருக்கு பதில் ஸ்ருதியை ஹீரோயினாக்கி உள்ளோம்" என்றார்.

Also Read Oviya thrown out of ‘Amara’

Source: Dinakaran
 

Post a Comment