சினிமாவில் நடிப்பதை விட விளம்பரங்களில் நடிப்பதில் அதிக பணம் கிடைப்பதால், பல நடிகர் நடிகைகளும் விளம்பரப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். விஜய், நயன்தாரா, அசின், த்ரிஷா, மாதவன், விக்ரம் என பெரும்பாலான நடிகர்கள் விளம்பரப் படங்களில் நடித்து வருகின்றனர்.
இன்று நடிகர், நடிகைகள் சிலர் தரமற்ற விளம்பர படங்களில் நடிப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அவர்கள் விளம்பர படுத்தும் பொருட்களை பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி தமன்னாவிடம் கேட்ட போது, நடிகர்- நடிகைகள் சமூகத்தில் பிரபலமான நபர்கள். எனவே அவர்களுக்கு சமூக பொறுப்புணர்வு இருக்கிறது. விளம்பரப் படங்களில் நடிப்பதில் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் விளம்பரபடுத்தும் பொருட்களை பொதுமக்கள் நம்பி வாங்குகிறார்கள்.
எனவே நடிகர்-நடிகைகள் விளம்பரபடுத்தும் பொருட்கள் தரமானவைதானா? என்று ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற பொருட்களை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிக்கக் கூடாது நான் விளம்பரப்படுத்தும் பொருட்களை முதலில் நானே பயன்படுத்திப் பார்க்கிறேன். அது நல்ல பொருள் என்று திருப்தி ஏற்பட்டால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன். ஒரு சிறிய தவறு நடந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும், என்றார்.
சொன்னதை கடைப்பிடித்தால் சரி..!
Post a Comment