மாதவனின் ஆட்டோகிராஃப் :முதல் காதல் பற்றி நெகிழ்ச்சி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தன் இளம் வயது கேர்ள் பிரெண்ட் பற்றி பேஸ்புக்கில் மாதவன் கூறியது: சிறுவயது முதல் என் குடும்பத்தைவிட்டு பிரிந்ததே இல்லை. வெளியில் சென்றால் நெருங்கிய நண்பர்களுடன் இருப்பேன். அப்போது எனக்கு 16 வயது. முதன் முறையாக கனடா நாட்டுக்கு பள்ளி சார்பில் ஒரு நிகழ்ச்சிக¢காக சென்றேன். குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லாமல்  முதன்முறையாக வெளிநாட்டில் தங்கும் அனுபவம். மனசுக்குள் ஒரு நடுக்கம். யாரிடம் எப்படி பழகுவது என்று புரியாத வயது. கனடா செல்வதற்கு முன் எனக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் கிடைத்தார். அழகும் திறமையும் நிறைந்தவர். எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. ஒருவரையொருவர் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டோம். எனது ஆசை, கோபம், லட்சியங்களை அவருடன் பகிர்ந்து கொண்டேன். கனடா செல்வதை அவரிடம் சொன்னதும் திடீரென்று ஓடிவந்து, என்னை இருக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டார். ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தேன். அதுதான் ஒரு பெண் என்னை கட்டி அணைத்த முதல் சம்பவம். வித்தியாசமான உணர்வை பெற்றேன். அதை என்னால் விவரிக்க முடியவில்லை. சூழ்நிலையால் நாங்கள் பிரிந்துவிட்டோம். ஆனாலும் அந்த நிமிடங்கள் பசுமரத்தாணிபோல் மனதில் பதிந்துவிட்டது.


Source: Dinakaran


Source: India Glitz
 

Post a Comment