‘உள்ளம் கேட்குமே’ படத்தில் அறிமுகமான ஆர்யாவுக்கு ‘நான் கடவுள்’ படம் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆமாம், தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தற்போது ஆர்யா வீட்டிற்கு படை எடுத்துள்ளனர். நான் கடவுள் படத்தில் ஆக்ஷன் காட்சியில் அசத்திய ஆர்யா, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் காமெடியுலும் அசத்தினார். பாலா, லிங்குசாமி, அடுத்து மிஷ்கின்… இன்றைய தேதியில் கேரியர் கிராஃப் பிரைட்டாக இருப்பது ஆர்யாவுக்குதான்.
கோலிவுட்டை கலக்கிய ஆர்யா, தற்போது டோலிவுட்டிலும் ஜொலிக்க தொடங்கியுள்ளாராம். ஆமாம், ஆர்யாவின் நான் கடவுள், பாஸ் என்கிற பாஸ்கரன் தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்ததில் ஏகப்பட்ட வருமானம் கிடைத்துள்ளது என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ‘வருடூ’ என்ற தெலுங்கு படத்தில் நெகட்டிவ் ரோலில் அசத்திய ஆர்யாவுக்கு தெலுங்கு பட தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் தற்போது ஆர்யா வீட்டிற்கு படை எடுத்து வருகிறார்கள்.
Source: Dinakaran
Post a Comment