நாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தனது புதிய படம் வெற்றி பெற பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பாம்பு கோயிலில் பிரார்த்தனை செய்தசார்.
மல்லிகா ஷெராவத் நாககன்னியாக நடித்த ‘ஸ்..ஸ்..ஸ்..’ என்ற புதிய படம், வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. இப் படம் வெற்றி பெற வேண்டி, கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மன்னரசாலாவில் உள்ள ஸ்ரீநாகராஜா கோவிலில் மல்லிகா ஷெராவத் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
இதற்காக அவர் மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் கோவிலை அடைந்து வழிபட்டார். இந்தியாவிலேயே இந்தக் கோவில்தான், பாம்பு கடவுளுக்கான கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
மல்லிகாவுடன், அப்படத்தின் தயாரிப்பாளர் கோவிந்த் மேனனும் வந்திருந்தார்.
Post a Comment