வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வண்டலூர் வன காப்பத்தில் உள்ள வெள்ளைப்புலியை நடிகர் கார்த்தி தத்தெடுத்தார். அக்டோபர் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வன உயிரினங்களின் பாதுகாப்பு வாரமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை வண்டலூர் வன உயிரியல் பூங்காவுக்குச் சென்ற நடிகர் கார்த்தி, அங்குள்ள வெள்ளைப்புலி ஒன்றை தத்தெடுத்தார்.
Source: Dinakaran
Post a Comment