திருப்பூர்: இனி அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே டிக்கெட்டுகளை விற்கப் போவதாக திருப்பூர் நகர திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
புதிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டதும், ஆரம்ப நாட்களில் வரும் கூட்டத்தைப் பயன்படுத்தி பெரும் வசூலை எடுக்க அதிக கட்டணம் வைத்து டிக்கெட் விற்கப்படுகிறது.
சென்னை நகரில் பெரும்பாலும் இப்படி நடப்பதில்லை. ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இது எழுதப்படாத நடைமுறையாக உள்ளது.
ஆனால் இப்படி வசூலாகும் தொகை பெருமளவு விநியோகஸ்தர்களுக்கே போய் விடுவதாகவும், இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை எனவும கூறப்படுகிறது.
அதே நேரத்தில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் மக்களிடையே தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என திரையரங்க உரிமையாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே , இனிமேல் எப்போதும் அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே டிக்கெட் விற்பனை செய்வது என திருப்பூரில் திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.
அட…!
Post a Comment