‘கந்தா’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்க பட ஹீரோயின் மித்ரா மறுத்தாராம். இது பற்றி பட டைரக்டர் பாபு கே.விசுவநாத் கூறியதாவது: 'கந்தாÕ படத்தில் கரண் ஹீரோ. மித்ரா ஹீரோயினாக அறிமுகமாகிறார். தஞ்சாவூரில் இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்தது. 'உயர்ந்தது காதல்Õ எனத் தொடங்கும் பாடல் காட்சியை படமாக்க மலேசியா சென்றோம். அப்போது மித்ராவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. ஒன்றிரண்டு நாளில் சரியாகி விடுவார் என்று பொறுத்தோம். ஆனால் யாரையும் மதிக்காத போக்கு அதிகரித்தது. ஷூட்டிங்கில் பாடல் காட்சி பற்றி விளக்கம் செல்லும்போது, அதை கவனிக்காதது போல் இருப்பார். அந்த பாடலில் கவர்ச்சி அவசியம். அதற்காக அவருக்கு கவர்ச்சி உடையை தந்தோம். அதற்கு மேல் இன்னொரு ஆடையை போர்த்திக்கொண்டு நடிக்க வந்தார். 'இப்படி நடிப்பது இந்த பாடலுக்கு நன்றாக இருக்காது. கவர்ச்சி உடை தெரியும்படி நடியுங்கள்Õ என்றேன். ஆனால் அவர் மறுத்தார். இதனால் கோபம் வந்தது. 'ஆரம்பத்தில் மரியாதையுடன் நடந்தீர்கள். இப்போது ஹீரோயினை மாற்ற முடியாத அளவுக்கு காட்சிகளை படமாக்கிவிட்டேன். அந்த தைரியத்தில் மரியாதை குறைவாக நடப்பதும் சொல்கிறபடி நடிக்காததும் சரியல்லÕ என சத்தம் போட்டேன். இப்படி சொன்னதால் அழுது கொண்டிருந்தார். பின் அவராகவே சமாதானமாகி 20 நிமிடத்துக்கு பின் நடிக்க வந்தார். இவ்வாறு பாபு விசுவநாத் கூறினார்.
Source: Dinakaran
Post a Comment