'சிங்கம் புலிÕ படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்கிறார் திவ்யா. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ராயபுரம் மீன் மார்க்கெட்டில் நடந்தது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட திவ்யா, ஸ்பாட்டுக்கு வந்ததிலிருந்து ஒரு மாதிரியாக இருந்தார். ஜீவா, திவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. காட்சிக்கு இடையே அவ்வப்போது கேரவானுக்குள் ஓடியபடி இருந்தார் திவ்யா.
'உடல்நிலை எதுவும் சரியில்லையா?Õ என்று அவரிடம் கேட்டபோது, 'அதெல்லாம் ஒன்றுமில்லை. மீன் மார்க்கெட்டில் இதுபோன்ற சூழலில் இதுவரை நடித்ததில்லை. மீன்வாடையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுதான் காட்சி முடிந்ததும் கேரவனுக்குள் ஓடிவிடுகிறேன்Õ என்றார். திவ்யாவின் நிலையை புரிந்து கொண்ட இயக்குனர், அவர் சம்பந்தப்பட்ட காட்ச¤களை உடனடியாக எடுத்து திவ்யாவை அனுப்பி வைத்தாராம். Source: Dinakaran
Post a Comment