ரசிகர்கள் என்னை மறக்கவில்லை என்று சோனியா அகர்வால் கூறினார். இயக்குனர் செல்வராகவனுடன் விவாகரத்தான பிறகு, 'வானம்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் சோனியா அகர்வால். இது பற்றி அவர் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்தபோது கொஞ்சம் பதற்றமாக இருந்தது. இப்போதும் முதல்படத்தில் நடிக்கும் புதுமுகமாகவே உணர்கிறேன். குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் கெட்டியாக இடம் பிடித்தேன். நான் எங்கு சென்றாலும் அவர்கள் என்மீது காட்டுகிற பரிவு, அவர்கள் என்னை மறக்கவில்லை என்பதையே காட்டுகிறது. அவர்களின் நம்பிக்கையையும் அன்பையும் கெடுக்காத வகையில் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.
Source: Dinakaran
Post a Comment