திரையில் கவர்ச்சி ராணியாகவும் நிஜத்தில் சோக நாயகியாகவும் திகழ்ந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைதான் இப்போது தமிழ் மறறும் இந்தியில் படமாகிறது. சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க வித்யா பாலன் நடிக்கிறார். ஆனால் படக் குழுவினருக்கு திடீரென ஒரு நிபந்தனை விதித்தாராம் வித்யா பாலன். சில்க் வேடத்தில் நடிக்க தயாரா இருக்கிறேன்; ஆனால் அவரைப் போல கிளாமரா நடிக்க மாட்டேன், என்று நடிகை வித்யாபாலன் திடீரென கூறியிருப்பதால் சில்க் வாழ்க்கை வரலாறு படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர். மேலும் அவரை சமாதானம் பேசி நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
Source: Dinakaran
Post a Comment