நயன்தாரா உருவப்படத்திற்கு பெண்கள் அமைப்பினர் தீ வைப்பு!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக அறிவித்தால் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. நயன்தாராவுக்கு எதிராக பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளாக செய்திகள் தெரிவிக்கின்றனர். ஜான்சி ராணி பெண்கள் பாதுகாப்பு சங்கம், மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பு போன்றவற்றை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று காலை திருமங்கலம் சிக்னல் அருகில் கூடினார்கள். கையில் நயன்தாரா உருவப்படங்கள் வைத்திருந்தனர் அவர்கள், திடீரென்று நயன்தாராவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர்.
முன்னதாக, விஜய் நடித்த வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நயன்தாராவுக்கும், பிரபுதேவாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளாக நாளாக காதலாக மாறியது. தொடர்ந்து நயன்தாராவை திருமணம் செய்யப்போவதாக பிரபுதேவா அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி ரமலத், பிரபு தேவா மீது சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், என் கணவர் பிரபுதேவா, குடும்பச்செலவுக்கே பணம் தருவதில்லை. என்னையும், என் குடும்பத்தினரை என் கணவர் சந்திக்க முடியாமல் நடிகை நயன்தாரா தடுத்து வருகிறார். என் கணவரை என்னிடம் சேர்த்து வையுங்கள், என்று கோரியுள்ளார். ரமலத்துக்கு பிரபுதேவா ரூ.2 கோடி பணம் மற்றும் ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகளை வழங்கியிருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை என்றும் ரமலத் கூறியுள்ளார்.


Source: Dinakaran
 

Post a Comment