10/12/2010 1:06:32 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
கண்டுக்கிட்டேன் கண்டுக்கிட்டேன் படத்தை இயக்கியவரு மேனன் டைரக்டரு. இப்போ சினிமாவுல காட்ற கவனத்தைவிட தன்னோட கேமரா
இன்ஸ்டிடியூட்லதான் அக்கறை காட்டுறாராம்… காட்டுறாராம்… இந்தியில படம் இயக்க வந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டாரு. சொன்ன நேரத்துல கதையை தராததால வாய்ப்பு பறிபோயிடுச்சாம்… பறிபோயிடுச்சாம்…
கோலிவுட், டோலிவுட், பாலிவுட்ல ஹிட்டாகுற படங்களை இந்த வுட்டுக்காரங்களே மாத்தி மாத்தி ரீமேக் பண்றதுதான் இப்போதைய டிரெண்ட். அதுக்காக ஸ்டேட் வ¤ட்டு ஸ்டேட் வந்து ஹீரோக்கள் ஒருத்தரோடு இன்னொருத்தர் நட்பை வளர்க்கிறாங்களாம்… வளர்க்கிறாங்களாம்… 'உங்க படம் ஹிட்டான எனக்குதான் ரீமேக் ரைட்ஸ் தரணும்'னு கேட்கிறாங்களாம்… கேட்கிறாங்களாம்…
அலைபாயுற நடிகரு ரெண்டு தமிழ்ப் பட வாய்ப்புகளை மறுத்துட்டாரு… மறுத்துட்டாரு… அதுல ஒண்ணு, வில்லன் கேரக்டராம். ஐம் காட் ஹீரோவுக்கு
வில்லனா நடிக்க டைரக்டரு கேட்டாராம்… கேட்டாராம்… ‘நான் எப்போவுமே ஹீரோதான். வில்லனா நடிக்க மாட்டேன்’னு நடிகரு சொல்லிட்டாராம்…
சொல்லிட்டாராம்…
Post a Comment