நமீதா கடத்திய கார் டிரைவர் :திருச்சியில் பரபரப்பு!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் ரசிகர்களின் கவர்ச்சிக்கன்னியாக திகழும் நமீதா நமீதா. திருச்சி விமான நிலையத்திலிருந்து கடத்தப்பட்டார். சினிமாவில் நடித்த நேரம் போக மீதி நேரங்களில், நமீதா பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்துகொள்கிறார்.
அழைப்பு
முன்னாள் கதாநாயகனும், மூத்த நடிகருமான எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று நமீதாவுக்கு அழைப்பு வந்தது. அந்த விழாவில் கலந்துகொள்ள நமீதாவும் அவருடைய மானேஜர் ஜானும் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்றனர்.
டிரைவர் உடையில்…
அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கியதும், டிரைவருக்கான சீருடை அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து வரவேற்றார். “கரூர் நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்துச்செல்ல என்னைத்தான் அனுப்பி இருக்கிறார்கள்” என்று நமீதாவிடம் கூறினார். அதை நம்பி நமீதாவும் அவருடைய காரில் ஏறினார். உடனே காரை மின்னல் வேகத்தில் அந்த இளைஞர் ஓட்டிச் சென்றார்.
அதிர்ச்சி
நிஜமாகவே நமீதாவை வரவேற்று அழைத்துச்செல்ல வந்திருந்த டிரைவர், இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நமீதாவை ஏற்றிச் சென்ற காரை பின்தொடர்ந்தார். இந்த சம்பவம் பற்றி அவர், விழா குழுவினருக்கு `செல்போன்’ மூலம் தகவல் கொடுத்தார். அதை தொடர்ந்து விழா குழுவினர் கரூரில் இருந்து ஐந்தாறு கார்களில் திருச்சியை நோக்கி விரைந்தார்கள். நமீதாவை ஏற்றி வந்த காரை வழியிலேயே மடக்கினார்கள். நமீதாவை கடத்த முயன்ற போலி டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.
ரசிகர்
போலீசில் பிடிபட்ட அந்த போலி டிரைவரின் பெயர், பெரியசாமி (வயது 26) திருச்சியை சேர்ந்தவர். அவர் நமீதாவின் தீவிர ரசிகர் என்றும், நமீதா மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக அவரை தன் காரில் அழைத்து சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Source: Dinakaran
 

Post a Comment