குளுகுளு ஆன கடு கடு வடிவேலு!

|

http://s.chakpak.com/se_images/84601_-1_564_none/vadivelu-wallpaper.jpg

காமெடி நடிகர்கள்  வடிவேலுவும், சிங்கமுத்துவும் நிலமோசடி விவகாரத்தில் மோதிக் கொண்ட சம்பவத்துக்கு பிறகு வடிவேலு ரொம்பவே மாறி விட்டார் என்கிறார்கள் கோடம்பாக்கத்துவாசிகர். முன்பெல்லாம் சூட்டிங் ஸ்பாட்டில் கடு கடுவென இருக்கும் வடிவேலு சமீப காலமாக குளுகுளுவென கூலாக இருக்கிறாராம். காரணம் என்னவாம்? சிங்கமுத்துவுடனான மோதலுக்குப் பிறகு வைகைப்புயல் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் குறிப்பிடும்படி இல்லையாம். அதிலும் சுந்தர் சி.யுடன் சண்டை போட்டு வந்தபிறகு வின்னர், தலைநகரம் மாதிரியான பேசப்படும் அளவுக்கு காமெடி எதுவும் ஒர்க்-அவுட் ஆகவில்லை. தனுஷூடன் முறைத்துக் கொண்டதால் ‌வாய்ப்புகள் வேறு நடிகருக்கு போகிறது. இதையெல்லாம் கூட்டிக் கழித்து பார்த்த வடிவேலு, சமீப காலமாக சினிமா வட்டாரத்தில் விறைப்பாக நடந்து கொள்வதை குறைத்துக் கொண்டிருக்கிறாராம். அதேநேரம் தனது காமெடிக் குழுவுவினரிடம் ஒரே மாதிரியான, சலித்துப் போன காமெடியாய் இல்லாமல் புதுசு புதுசா யோசித்து மக்களை சிரித்து ரசிக்க வைக்கும் காமெடியை உருவாக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
 

Post a Comment