9/15/2010 5:50:31 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
ஸ்பைடர் வலை படத்தை தயாரிச்சவரு அடுத்து ஒரு படத்தை இயக்கினாரு. ஆனா அதுல டைரக்டருன்னு வேற பெயரை யூஸ் பண்ணினாரு… பண்ணினாரு… இப்போ திரும்ப ஒரு படத்தை இயக்குறாரு. அதை இன்னொரு பெயர்லதான் இயக்குறாராம்… இயக்குறாராம்… கடன் கொடுத்தவங்ககிட்டேயிருந்து தப்பிக்கத்தான் இப்படி பெயரை மாத்தி, மாத்தி எஸ் ஆகுறாராம்… தயாரிப்பு எஸ் ஆகுறாராம்…
திமிரான நடிகருக்கு மில்க் இயக்குனரு ஏகப்பட்ட கண்டிஷன் போடுறாராம்… போடுறாராம்… படத்துல கெட்அப் மாத்தி இருக்கீங்க. அதனால வெளியிடங்களுக்கு போகக் கூடாதுன்னு சொல்றாராம்… சொல்றாராம்… இதனால ஷூட்டிங் இல்லாத நேரத்துல நடிகரு வீட்லேயே இருக்கிறாராம். டைரக்டர் மேல கடுப்பாவும் இருக்கிறாராம்… இருக்கிறாராம்…
சமீபத்துல பூரண நடிகை நடிச்ச மலையாள பட ஷூட்டிங் நடந்துச்சு. 'இந்த காட்சியில பிசின் மாதிரியே நடிக்கணும்'னு டைரக்டர் சொன்னாராம்… சொன்னாராம்… கோபமான பூரணம், 'ஏன் அவரோடு என்னை கம்ப்பேர் பண்றீங்க. என்னோட ஸ்டைல்லதான் நான் நடிபேன்'னு உர்ராயிட்டாராம்… உர்ராயிட்டாராம்…
Post a Comment