மகாராஷ்டிர மாநில எம்.எல்.ஏ.வுடன் நடிகை நவ்நீத் கெளர் காதல்

|

Navneeth Kaur
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நாயகியாக நடித்த நவ்நீத் கெளருக்கும், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. விரைவில் மணம் புரியவுள்ளனராம்.

பஞ்சாபைச் சேர்ந்தவர் நவ்நீத். தற்போது தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். பெரிய அளவில் இவருக்கு தமிழ் சினிமாவில் இடம் கிடைக்கவில்லை. தமிழில் விஜய்காந்துடன் அரசாங்கம் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானியிலும் கருணாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்தநிலையில் இவருக்கும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏவான ரவி ரானா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

பத்னேரா தொகுதியைச்சேர்ந்த எம்.எல்.ஏதான் ரவி ரானா. இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்துக் கொண்டபோது காதல் பற்றிக் கொண்டதாம்.

சில பல சந்திப்புகளுக்குப் பிறகு காதலை உறுதி செய்து கொண்ட இருவரும் தற்போதுஅதை கல்யாணத்தில் முடிக்கத் தீர்மானித்துள்ளனர்.

மகாராஷ்டிர எம்எல்ஏவை மணக்கவுள்ளதால் கல்யாணத்திற்குப் பிறகு நவ்நீத் கெளர் நடிக்க மாட்டார் என்று தெரிகிறது.

 

Post a Comment