சென்னை: கலாச்சார, குடும்ப அமைப்புக்கே கேடு விளைவிக்கும் பிரபுதேவா வீட்டை முற்றுயிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு. அதை பிரபுதேவா மீறுகிறார்.
பழைய காலத்தில் உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. கணவன் இறந்ததும் மனைவியும் அதே நெருப்பில் உயிரை விடுவாள். நாகரீகம் வளர அதை முட்டாள் தனம் என ஒதுக்கி விட்டோம். ஆனால் 3 குழந்தைகள் பெற்ற அவர்களை உதறி விட்டு ஓடுவதும், காதலியை மறக்க முடியவில்லை என்று சொல்வதும் நாகரீகத்துக்கு உகந்ததாகவே அமையாது.
இந்தியாவின் பெருமைகளே நமது கலாச்சாரமும் கோவில், வேட்டி, சட்டை, புடவைகளும்தான். உலகமயமாக்கலில் நமது கலாச்சாரத்தை தாராளமயமாக்க முடியாது. பிரபுதேவாவும் நயன்தாராவும் கலாச்சாரத்தை சீரழிக்க பார்க்கிறார்கள்.
சுதந்திர போராட்டத்தை தூண்டி விட சினிமா பயன்பட்டது. அது இப்போது கலாச்சார சீரழிவுக்கு பயன்படுகிறது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களும் பொது மக்கள் பார்வையில் இருப்பவர்களும் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதற்கு எதிராக நடந்தால் அவர்களை மக்கள் மத்தியில் இருந்து துரத்தி அடிப்போம்.
கலாச்சாரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரபுதேவா – நயன்தாராவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். பிரபு தேவா வீட்டில் ஓரிரு நாளில் முற்றுகை போராட்டம் நடத்துவோம். நயன்தாரா- பிரபுதேவா உருவப்படங்களை எரிப்போம்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் கண்ணன்.

+ comments + 1 comments
nayanthara idn't find any unmarried man? after marriage another few years what guarantee u will not put in ramlath's place. shame on u.
Post a Comment