நயன்தாரா மேனேஜர்-பிஆர்ஓ நீக்கம்-பல லட்சம் மோசடி?

|

Nayanthara
தனக்கு மேனேஜராக இருந்த அஜீத் மற்றும் பிஆர்ஓ ஜான்சன் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளார் நயன்தாரா.
இதன் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் திரையுலகை அதிர வைத்துள்ளது.
பிரபலமான அந்த ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 1 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள். ஆனால் நயன்தாராவிடம் அந்தத் தொகையை காட்டாமல் ரூ 60 லட்சம்தான் சம்பளம் பேசப்பட்டதாக மேனேஜர் அஜீத் மற்றும் பிஆர்ஓ சொன்னதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் சந்தேகம் கொண்ட நயன்தாரா, நேரடியாக சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை உரிமையாளரிடமே தொடர்பு கொண்டு விசாரிக்க, அவரும் முதலில் மழுப்பி, பின்னர் உண்மையைக் கூறியுள்ளார்.
கோபத்தை அடக்கிக் கொண்ட நயன்தாரா, மீண்டும் மேனேஜரையும், பிஆர்ஓவையும் அழைத்து விசாரிக்க அவர்கள் தொடர்ந்து அந்த ரூ 60 லட்சம் கதையையே தொடர்ந்தார்களாம்.
“கஷ்டப்பட்டு நடிப்பது நான், சம்பளம் பேசுவதாகக் கூறி எனக்கே தெரியாமல் பணத்தை அபகரிப்பதா?”, என்று கோபம் காட்டிய நயன்தாரா, உடனடியாக இருவரையும் நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை நயன்தாரா தொடர்பான அனைத்துப் படங்களுக்கும் இந்த இருவர்தான் சம்பளம் பேசினார்களாம். அதிலெல்லாம் எந்த அளவு பணம் கணக்கில் வராமல் போனதோ என்று அங்கலாய்த்தாராம் நயன். ஆனால் சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது (திருடனுக்கு தேள் கொட்டிய கதை!) என்ற சூழல் காரணமாக பல்லைக் கடித்துக்கொண்டு அமைதி காக்கிறாராம் நயன்தாரா.
ஆனால் இதுகுறித்து அஜீத்திடம் கேட்டபோது, நானாகவே நயன்தாராவிடமிருந்து விலகி வந்துவிட்டேன் என்றும், பணவிவகாரம் பற்றிய எதுவும் உண்மையில்லை என்றும், கூறினார்.
சம்பந்தப்பட்ட பிஆர்ஓவைத் தொடர்பு கொண்டால், அவர் போனையே எடுக்கவில்லை!
 

Post a Comment