எம்.ஜி.ஆர் நம்பி தயாரித்து இயக்கும் படம் 'பொறுத்திரு'. புதுமுகங்கள் விஜய்ராஜ், கவுரி, திவ்யா ஸ்ரீ நடிக்கிறார்கள். இந்த படத்துக்காக, 'எங்க வீட்டு பிள்ளை' படத்தில் இடம் பெற்ற 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாளவிளாக நடனம் ஆடியுள்ளார். இதுபற்றி எம்.ஜி.ஆர். நம்பி நிருபர்களிடம் கூறியதாவது: 'பொறுத்திரு' எல்லா அம்சங்களும் நிறைந்த கிராமத்து காதல் கதை. நான் பால்காரன் வேடத்தில் நடித்திருக்கிறேன். மாளவிகா திருமணத்துக்கு பிறகு முதன் முறையாக நடிகை மாளவிகாவாக நடிக்கிறார். கிராமத்துக்கு டீக்கடை திறக்க வரும் அவரை, ஊர் பெரிய மனிதர் என்ற முறையில் வரவேற்கிறேன். மாளவிகாவையும் என்னையும் இணைத்து எனது அத்தை மகள் கனவு காண்பதாக பாடல் வருகிறது. அதுதான் 'எங்க வீட்டு பிள்ளை' ரீமிக்ஸ் பாடல். மறைந்த எஸ்.எஸ்.சந்திரன் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதுதான் அவருக்கு கடைசி படம்.
Source: Dinakaran
Post a Comment