'கஜினி' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார் அசின். இதையடுத்து சல்மான் கான் ஜோடியாக 'ரெடி' படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கு படத்தின் ரீமேக். தமிழில் நடித்து வரும் 'காவலன்' மலையாள 'பாடிகார்ட்' படத்தின் ரீமேக். தொடர்ந்து ரீமேக் படங்களில் நடிப்பது பற்றி அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:நல்ல கதைகளின் ரீமேக்கில் நடிப்பது தவறில்லை. அப்படி நடிப்பதால்தான் அதிகமான ரசிகர்களிடம் படத்தையும் என் நடிப்பையும் கொண்டு செல்ல முடிகிறது. ஒரே கேரக்டரை திரும்பவும் செய்வது வெறுப்பாக இல்லையா என கேட்கிறார்கள். அதில் வெறுப்பு எங்கே வரபோகிறது? ஏற்கனவே நடித்த கேரக்டர் என்றால் அதை விட இன்னும் சிறப்பாக பண்ண வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமில்லாமல் எளிதாக நடித்துவிடவும் முடிகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறேன். நடிப்புக்கு மொழி முக்கியமில்லை. கதை நன்றாக இருந்தால் எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கலாம். 'லண்டன் ட்ரீம்ஸ்' படத்துக்கு பிறகு நான் நடித்து, இந்தி படம் எதுவும் வெளிவரவில்லை. தமிழில் பிசியாக இருப்பதால் இந்தியில் நடிக்கவில்லை. இன்னும் இரண்டு இந்தி படங்களில் நடிக்க இருக்கிறேன். இது ஜனவரியில் தொடங்கும். 'காவலன்' படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கிறார். அந்த படத்தில் நான் நடிப்பது பற்றி யாரும் பேசவில்லை.
Source: Dinakaran
Post a Comment