பெரிய நடிகர்களுக்கே ஒரு படம் ஓடாவிட்டால் மார்க்கெட் விழுந்துவிடுகிறது. கரணுக்கு மட்டும் எப்படி அடுத்தடுத்து படங்கள் வருகின்றன. எப்படி மார்க்கெட் இருக்கிறது? அவருக்கு எந்தப் படமும் சூப்பராகப் போகவில்லையே? விநியோகஸ்தர்கள் சொல்லும் பதில் இதுதான், அவருடைய படங்கள் எப்படியும் சுமாராகப் போய்விடுகின்றன. கரண் படத்துக்கென பெரிய பட்ஜெட் தேவையில்லை. அவருக்குச் சம்பளம் கொடுக்க கோடிகளைப் புரட்ட வேண்டியதில்லை. இதுதான் அவருடைய மார்க்கெட் ரகசியமாம்.
Source: Dinakaran
Post a Comment