அசின் பிறந்த நாள்:கேக் ஊட்டி சல்மான் கான் வாழ்த்து!

|

Asin and Salman Khan
மும்பையில் பிறந்தநாள் கொண்டாடிய அசினுக்கு, சல்மான்கான் கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அசினுக்கு இன்று 25வது பிறந்த நாள். காலையிலேயே பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தொடங்கிவி்ட்டன. மும்பையில் அசின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி, போனிகபூர் தம்பதிகள் குடும்பத்தோடு வந்து வாழ்த்தினர்.
தொடர்ந்து இரு படங்களில் அசினுடன் ஜோடியாக நடித்த நடிகர் சல்மான்கானும் வந்திருந்தார். பிறந்த நாள் கேக் ஊட்டி, அசினுக்கு அவர் வாழ்த்துத்தெரிவித்தார்.
இந்தி நடிகர்கள் ஷாகித் கபூர், நீல் நிதின் முகேஷ், தபு ஆகியோரும் வாழ்த்தினர். விஜய், சூர்யா போன்றோர் டெலிபோனில் வாழ்த்தினர்.
பிறந்தநாளையொட்டி அசினுக்கு ஏராளமான பரிசு பொருள்கள் குவிந்தன. பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி அசின் கூறுகையில், “பிறந்தநாளை எனது பெற்றோருடன் கொண்டாடுவதையே விரும்புகிறேன். இந்த முறை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எனது பள்ளி, கல்லூரி தோழிகள் தன்யா, ரோஸ் இருவரும் எனது பிறந்தநாளுக்காக இரு தினங்களுக்கு முன்பே இங்கு வந்து விட்டனர். ரொம்ப சந்தோஷமாக பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
இந்த பிறந்த நாளுக்கும் வழக்கம்போல பரிசுகளை அளித்தனர் என் பெற்றோர். கூடவே பர்த்டே ஸ்பெஷலாக கேரள உணவான அப்பம், அவல் பாயசம் என அசத்திவிட்டனர்…” என்றார்.
 

Post a Comment