அய்யனார் வன்முறை படமா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரிக்கும் படம் 'அய்யனார்'. ஆதி, மீரா நந்தன் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்ரன் கூறியதாவது: காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி, கிளாமர் எல்லாம் நிறைந்த கமர்சியல் படம் இது. கோபம் வந்தால் கொலை செய்பவன்தான் ஹீரோ. அதற்கு காரணம் என்ன? அவன் யார்? எதை நோக்கி போகிறான் என்பதை திரைக்கதையில் சொல்கிறேன். தணிக்கைக்கு சென்றபோது நல்ல படமாக இருக்கிறது. ஆனால் ரத்தம் அதிகமாக இருக்கிறது. அதை குறைத்தால் ரசிகர்கள் குடும்பத்தோடு பார்க்க உதவும் என்ற தணிக்கை குழுவின் கருத்தை ஏற்று கொஞ்சம் குறைத்தோம். ஆனாலும் ஆக்ஷன் வேகத்தை குறைக்கவில்லை. சிலர் 'அய்யனார்' என்ற பெயரை பார்த்ததும் வன்முறை படம் என்று தவறாக நினைக்கிறார்கள். அழகான ஆக்ஷன் படம். நான் இயக்கிய கன்னடப் படம் 'சொதேகரா' தற்போது வெளியாகி அங்கு ஹிட்டாகி உள்ளது.


Source: Dinakaran
 

Post a Comment